நிதிஉதவி பெறும் விவசாயிகள் பிப். 28க்குள் ஆதார் விபரம் புதுப்பிக்கணும்
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி பெறுபவர்கள் வரும் 28க்குள் ஆதார் விபரங்களை புதுப்பிக்க வேண்டும்

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பாரத பிரதமரின், விவசாயிகளுக்கான, கிஸான் கவுரவ் நிதி திட்டத்தின் கீழ், நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 93,089 Click here for more info விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில், விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் 11-வது தவணை (01.04.2022 முதல் 31.07.2022 வரை) தொகையை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு செய்வது அவசியம்.
தங்களது ஆதார் அட்டையிலுள்ள செல்பேன் நம்பரை இணைத்துள்ள விவசாயிகள், தங்களது ஆதார் எண் விவரங்களை பிரதமரின் கிஸான் கவுரவ் நிதி திட்ட வெப்சைட் முகவரியான, pmkisan.tn.gov.in-என்ற முகவரியில் பதிவு செய்தால், செல்போனுக்கு வரும் ஓடிபி மூலம் More helpful hints பதிவு செய்து புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் எண்ணுடன் செல்போன் நம்பிரை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ - சேவை மையங்களின் மூலம் ரூ.15 கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட வெப்சைட் முவகரியில், ஆதார் எண்ணை புதுப்பித்துக்கொள்ளலாம். பிரதமரின் விவசாயிகள் கவுரவ் திட்டத்தின்கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வரும் 28-ம் தேதிக்குள் அப்லோட் செய்து புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து நிதி உதவி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.