மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் ' ஒமைக்ரான் தடுப்புக்கானநடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

இதுவரை 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்றின் அறிகுறி காணப்படுவதாக தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் ' ஒமைக்ரான் தடுப்புக்கானநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் 83 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் 'ஓமைக்ரான' பாதிப்பில் 32 பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமாக காணப்படுகிறது.

உலக அளவில் ஒமைக்ரான் எதிர்பாராத அளவு வோமாகப் பரவிவருகிறது என்று உசுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதிலிருந்து அதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.

ஏறக்குறைய 90 நாடுகளில் இதுவரை ' ஒமைக்ரான் தொற்று காணப்படுவது உறுதியாகி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமின் கணிப்புப்படி ஏனைய நாடுகளில் நோய்த்தொற்று கண்டறியப்படாவிட்டாலும் பெரும்பாலான நாடுகளில் 'ஒமைகரான்' உருமாற்றம் நுழைந்திருக்கிறது.

அதிவேக மாகவும், அதிக அளவிலும் 'ஒமைக்ரான' உருமாற்ற பாதிப்பு தாக்குமானால், அதன் தீவிரம் குறைவாக இருந்தாலும்கூட அதை எதிர் கொள்ளும் அளவிலான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட "ஓமைக்ரான்" உருமாற்றம், ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளை பாதித்ததும், இரண்டு தவனை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கியதும் நமக்கு Visit this link அச்சத்தை அதிகரிக்கிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிவேகமாகப் பரவிவரும் 'ஒமைக்ரான்" பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொருஐந்து நாள்களிலும் இரட்டிப்பாகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ஆப்பிரிக்க கண்டம் 83% அதிகரித்த பாதிப்பை எதிர்கொண்டது.

அந்த கண்டத்தில் 20 நாடுகளில் மட்டும்தான் 10% மக்கள்